Breaking News

தூத்துக்குடியில் கால்நடை தடுப்பூசி முகாம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்!

 


புதுக்கோட்டை அருகே சிறுபாடு கிராமத்தில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டம் சார்பில் கால் மற்றும் வாய் நோய்களுக்கு 6 ஆவது சுற்று தடுப்பூசி முகாம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, குமாரகிரி ஊராட்சி, சிறுபாடு கிராமத்தில் நடைபெற்றது. இதில், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர், பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, கால்நடைகளுக்கு நோய் தடுப்பு மருந்து மற்றும் மாத்திரைகளை முறையாக வழங்கிட வேண்டும் என அதிகாரிகளிடம் எடுத்துக்கூறினார்.

விழாவில், எம்.சி. சண்முகையா எம்எல்ஏ, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹைகோர்ட் மகாராஜா, பானு, கால்நடை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) செல்வக்குமார், துணை இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) ஆண்டனி இக்னேஷியஸ் சுரேஷ், உதவி இயக்குநர் வேல்மாணிக்கவள்ளி, தலைமை மருத்துவர் ஜோசப்ராஜ், உதவி மருத்துவர் ஆனந்தராஜ், மருத்துவர்கள் பிரபாகர், சரண்யா, பெரியசாமி, விக்னேஷ், கணேசன், ரவிக்குமார், முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின், ஊராட்சி மன்றத் தலைவர் ஜாக்சன் துரைமணி, திமுக மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரி சங்கர், தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, துணைசெயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் செல்வக்குமார், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, சிறுபான்மை அணி தலைவர் ராஜா ஸ்டாலின், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், அவைத்தலைவர் பாலசுந்தரம், மாநில பேச்சாளர் சண்முகம் நாராயணன், ஒன்றிய வழக்கறிஞரணி மணிகண்டன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சைமன், தொழிலாளரணி மொபட்ராஜன், தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன் மற்றும் கிருபாகரன், பூங்குமார், கபடி கந்தன், கப்பிக்குளம் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்,


செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!